முதற் பக்கம் arrow முதற் பக்கம்
முதற் பக்கம்
சேர் முகமட் அன்வர் பவர்வாஸ் -Bestway London
Monday, 14 January 2008
Imageஇந்தியாவிலே பஸ் காண்டக்டர் இன்று சூப்பர் ஸ்டார் அது ரஐனி எங்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். அதேபோல் அன்று இலண்டனிலே பஸ் காண்டக்டராக இருந்தவர் இன்று பல பில்லியன் பவுண்ஸ்களுக்கு சொந்தக்காரர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

பிரித்தானியாவிலே இருக்கின்ற பல சிறு வியாபாரங்களுக்கு (எம்மவர்களது சிறுவியாபார நிலையங்களுக்கும்) தேவையான அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதுடன் மில், சிறுவியாபாரங்கள், வங்கி, சிமெந்து தொழிற்சாலை, கட்டுமானப்பணிகள் என்று பல வியாபாரங்களுக்கு சொந்தக்காரராக இருப்பவர்தான் அன்றைய பஸ் காண்டக்டர் இன்றைய சேர். அவர்தான் பெரும் மதிப்பிற்குரிய சேர் முகமட் அன்வர் பவர்வாஸ்

“எதற்குமே முயற்சி தேவை என்கிறார் சேர் முகமட் அன்வர் பவர்வாஸ்”

Imageபாகிஸ்தானிலே ஒரு ஏழை கமக்காரரின் மகனாக 1935ஆம் ஆண்டு பிறந்த அன்வர் பவர்வாஸ் தன்னுடைய இருபத்தியோராவது வயதிலே படிப்பதற்காக பிரித்தானியாவுக்கு 1956ஆம் ஆண்டளவில் வருகின்றார். தன்னுடைய செலவுக்காக கிடைத்த எந்த வேலைiயும் ஈடுபாட்டுடன் செய்தார். அப்படியாக செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு கிடைத்த இன்னும்மொரு வேலை தான் இலண்டனின் மிக முக்கியமான நகரங்களில் ஓன்றாகிய பிறட்போட் நகரத்திலே பஸ்காண்டக்டர் வேலை. அவ் வேலை மூலம் கிடைத்த சேமிப்பை அடிப்படையாக வைத்து சுயமாக தொழில் தொடங்குவது என்ற தீர்மானத்துடன் இலண்டன் வந்த ஆறாவது வருடங்களிலேயே ஒரு நிறுவனத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

Last Updated ( Monday, 14 January 2008 )
Read more...
பத்தே நாட்களில் £10000 உழைக்கலாம்?
Monday, 14 January 2008
Imageசாவால்கள் நிறைந்ததுதான் மானிடவாழ்கை, அந்த சாவல்களை எவ்வாறு மனிதன் எதிர்கொண்டு வெற்றியடைகிறானோ அவன்தான் வாழ்கையின் உயரத்துக்கு செல்வான் என்பது யதார்தம். இங்கும் அப்படி தான் தொழில் என்று வந்திட்டால் சாவால்களை எதிர்கொள்ளவேண்டும்

சவால்கள் என்கின்ற போது பங்குச் சந்தை (Share Market), பணச்சந்தை (Currency Market), பொருள்சந்தை (Commodity Market) போன்ற முதலீட்டுச் சந்தைகள் சாவால்கள் நிறைந்தவையே இருப்பினும் இத்தகைய சவால்களை ஏற்க தயாராக இருப்பவர்கள் இச்சந்தைகளிலே முதலீடு செய்யும் போது பெரும்தொகையான பணத்தை இலாபமாக (நட்டமும் ஏற்படும்) ஈட்டுகிறார்கள்.

Last Updated ( Monday, 14 January 2008 )
Read more...
ஒரு இலட்சம் ரூபாவில் ஒரு கார்
Thursday, 10 January 2008
Imageஉலகத்திலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நிறுவனமாகிய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் காராகிய "டாடா நானோவை" டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா இன்று அறிமுகப்படுத்தினார்.

டெல்லியில் இன்று துவங்கிய ஆட்டோ எஸ்போ என்ற வாகன வர்த்தக கண்காட்சியில் டாடாவின் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய தொழில் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உலகத்திலேயே மலிவு விலை காரை அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


இதை அறிமுகப்படுத்தி ரத்தன் டாடா பேசுகையில்இ நான்கு வருடங்களுக்கு முன்பு மலிவு விலை கார் தயாரிப்பு திட்டத்தில் இறங்கினோம். அப்போது ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்துவோம் என்று உறுதி மொழி அளித்தோம். கடந்த நான்கு வருடங்களில் கார் தயாரிக்க தேவையான பல பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் நாங்கள் முன்பு கூறிய உறுதி மொழியின் படி ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று கூறினார். இக்கார் செப்டம்பர் மாதமளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விற்பனை விலை ரூ.1 லட்சம; (2500 அமெரிக்டொலர் அல்லது 1277 ஸ்ரேலங் பவுண்ஸ்) இந்திய ரூபா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Last Updated ( Friday, 11 January 2008 )
2008 இல் வீட்டு விலை..
Tuesday, 08 January 2008
Imageபிரித்தானியாவில் யாரை பார்த்தாலும் எந்தநேரமும் வீட்டு விலை குறைய போகின்றது என பொருளாதார வல்லுனர்கள்போல் கதைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் எம்மவர்கள் விதிவிலக்கானவர்கள் அன்று, இவர்களும் தமக்கு தெரிந்த வகையில் பொருளாதாரத்தை அலசிஆராய்கிறார்கள். இவர்களது கதையை கேட்டு கஸ்டபட்டு உழைத்த காசிலை வாங்கின வீட்டுக்கு என்ன நடக்குமோ என்று எம்மவர்கள் பலர் யோசிக்க தொடங்கிவிட்டார்கள். அதிலும் ஒரு சிலர் நல்லா குறைஞ்சா ஒரு இரண்டு முன்டை வாங்கிபோடலாம் என நினைப்பவர்களும் எம்மில் உண்டு.
 
குறிப்பாக இந்த வீட்டு சந்தையை நோக்கினால் வீட்டு விலைகளின் ஏற்றத்தாழ்வானது ஒரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளிலே கூடிக்குறைகின்றன. ஆதாவது கடந்த 200 ஆண்டுகளுக்கான வீட்டு விலைகளின் புள்ளிவிபரங்களை உற்றுநோக்கினால் மிக முக்கியமான ஒரு விடயத்தை எம்மால் அவதானிக்க முடியும்.

அது என்னவெனில் இந்த 200 வருட புள்ளிவிபரங்களிலே வீட்டுக்கான விலைகளின் ஏற்றதாழ்வுகள் ஒவ்வொரு 18 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்ந்தவண்ணமுள்ளது. அந்த வகையிலே பிரித்தானியாவில் கடைசியாக இடம் பெற்ற வீட்டு விலைகுறைப்பானது 1990 ஆம் ஆண்டளவிலே இடம்பெற்றது அனைவருக்கு தெரிந்ததே இந்த ஆண்டிலே எம்மவர்கள் பலர் வீட்டுக்கான மாதாந்த தவணையை கட்ட முடியாமல் வீட்டு சாவியை வங்கியிடம் கொடுத்து விட்டு சென்ற நிகழ்வுகள் பல.

எனவே கடந்த கால புள்ளிவிபர அடிப்படையில் பார்கின்றபோது இந்த 18 வருட இடைவெளி என்பது இந்த வருடமாக(2008) இருப்பதால் வீட்டு விலைகள் குறைய கூடிய சாத்தியகூறுகள் இருக்கின்றது. எனவே முதலீடு என்ற அடிப்படையில் வீடுகளை வாங்க இருக்கும் முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையாக செயற்பட்டால் நன்று.

முக்கிய குறிப்பு:

இந்த தகவல் எம்முடைய தனிப்பட்ட கருத்து இதனைக் குறிப்பாக கொண்டு செயற்பட்டு இதனால் ஏற்படும் இலாப நட்டத்துக்கு நாம் பொறுப்பல்ல

Last Updated ( Tuesday, 08 January 2008 )
எலி வளை ஆனாலும் தனி வளை
Tuesday, 01 January 2008
Imageஎலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்று நம்மவர்கள் சும்மாவா சொன்னார்கள். எவ்வளவு காலத்திற்கு தான் யாருடைய வீட்டிலே வாடகைக்கு இருப்பது எனவே தான் இலண்டனிலே எம்மவர்களும் தமது பெருமுயற்சியால் தங்களுக்கு என சொந்தமாக வீடுகளை வாங்குகிறார்கள். ஆனால் வீடுவாங்கும் போது எப்படிப்பட்ட நிறுவனங்களிடம், எவ்வளவு கடன்களை பெறுவது போன்ற விடயங்களை விபரம் அறிந்த சரியான ஆலோசகர்களிடம் இருந்து விபரங்களை பெறுவது இன்றியமையாதது.

வீட்டுக்கடன் கொடுப்பதற்காகவே பல வங்கிகள் உள்ளன. வருமானத்ததை அடிப்படையாக கொள்ளாமல் வீட்டுக்கடன் கொடுப்பதற்கு பல வங்கிகள் இருந்தாலும். கூடுதலான வங்கிகள் கூடிய வருமானத்தையும் கூடுதலான தொகையை வைப்பாக செலுத்துபவர்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு கடனைக் கொடுக்க நேசன்வைற் பில்டிங் சோசைற்றி, ஹலிஃபக்ஸ் பில்சி, ஸ்கொட்லானட் வங்கி போன்ற வங்கிகள் முன்வருகின்றன.



 
Last Updated ( Friday, 04 January 2008 )
Read more...
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Results 37 - 42 of 42

advertisement

advertisement

advertisement

letzm.jpg