|
KFC தாத்தா MR.HARLAND SANDERS |
|
Friday, 22 February 2008 |
 ஓய்வுபெறுகின்ற வயதிலே ஒருவர் வியாபாரத்ததை ஆரம்பிக்கின்றார் என்றால் அது ஒரு வியப்பான அனுபவம். அத்தகைய ஒரு முயற்சியுடாக நடைமுறைக்கு வந்ததுதான் இன்று உலகத்திலே இருக்கின்ற மிக முக்கிய விரைவு உணவகங்களில் ஒன்றாகிய Kentachy Fried Chicken (KFC) ஆகும்.
 இத்தகைய முயற்சியை செய்தவர் அறுபத்திரண்டு வயதுடைய Harland Sanders என்ற ஒரு மூத்த இளைஞர். 1890 ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி அமெரிக்க கண்டத்தில் உள்ள Henryville, Indiana என்ற இடத்திலே பிறந்த Harland Sanders அவர்கள். |
|
Last Updated ( Friday, 07 March 2008 )
|
|
Read more...
|
|
|
Monday, 11 February 2008 |
|
மைக்கிரோசாஃப்ட் நிறுவனமானது யாஹீவை வாங்கபோகின்றது என்று கடந்த வாரம் வெளிவந்த செய்தியானது இணையப் பாவணையாளர்களிடையே பெரிய ஒரு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்த வியாபாரத்தை யாஹீ நிறுவனமானது நிராகரித்துள்ளது.
எறத்தாழ $40 பில்லியன் அமெரிக்கடொலர் கொடுத்து யாஹீவை வாங்குவதற்கு மைக்கிரோசாஃப்ட் நிறுவனம் தாயாராக இருந்தது ஆனால் இந்த விலை மதிப்பானது தமது நிறுவனத்தை குறைத்து மதிப்பிடப்பட்டதாக இன்று யாஹீ வெளியிட்டுள்ள அறிக்கையிலே சுட்டிக்காட்டுகிறது.
ஆனாலும் பங்கொன்றுக்கு $31 டொலர்களை மைக்ரோஸொப்ட் தருவதற்கு தயாரகவிருந்ததும் இப்பெறுமதி இந் நிறுவனம் யகூவை வாங்க விரும்புவதாக செய்தி வெளியிட்ட தினத்தில் அதாவது February 1 இல் யாகூ பங்கொன்றின் பெறுமதியை காட்டிலும் 62% அதிகம் என்பதும் கடந்த இரண்டு வருடங்களாக யாகூ பங்கொன்றின் பெறுமதி $40 டொலர்களுக்கு அதிகமாக கூடியதில்லை என்பதும் இங்கே குறிபிடத்தக்கது.
|
|
Last Updated ( Tuesday, 12 February 2008 )
|
|
|
யாஹீவை மைக்கிரோசாஃப்ட் நிறுவனம் வாங்குகிறது. |
|
Saturday, 02 February 2008 |
|
உலக அளவில் என்ன உங்களுக்கு தேவையோ அதனை இருந்த இடத்தில் இருந்த பெறக்கூடியவாறு தேடுதளங்களில் இன்று முன்னனியில் நிற்கும் குகிள் (Google) நிறுவனத்துக்கு சரியான போட்டி நிறுவனமாக யாஹீவை (Yahoo) உருவாக்குவதுடன் குகிள் நிறுவத்தினுடைய விளம்பரதாரர்களை தன்னுடைய பக்கம் கவருவதற்காகவும் உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் யாஹீவை $46.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (£22.4 b) வாங்க முன்வந்துள்ளதாகவும் அதனை தாம் பரிசிலிப்பதாகவும் யாஹீவை அறிவித்துள்ளது.
யாஹீவுக்கு மைக்ரோசாஃப்ட் வழங்க முன்வந்த தொகையானது இன்றைய பங்கு சந்தையிலே யாகுவுக்கு இருக்கின்ற விலையை விட 62% கூடுதலாகும்.
ஆகவே இந்த வியாபாரம் நன்றாக அமைந்தால் இணையத்தளத்தளங்களை பாவிப்பவர்களுக்கு இன்னும் நல்ல நல்ல பல தகவல்கள் வரகூடும்.
|
|
Last Updated ( Saturday, 02 February 2008 )
|
|
|
பிரிட்டிஸ் ஏயார்வேஸ்க்கு இலாபமாம் |
|
Friday, 01 February 2008 |
|
பிரித்தானியாவின் விமான சேவை நிறுவனமாகிய பிரிட்டிஸ் ஏயார்வேஸ் இன்று வெளியிட்டுள்ள ஒன்பது மாதத்துக்கான கணக்கறிக்கையிலே £788 மில்லியன் இலாபமாக ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த இலாபமானது 2006 ஆண்டுடன் ஒப்பிடுகையிலே 34.5% கூடுதலாக கிடைத்திருக்கிறது. இருப்பினும் இந்த இலாபமானது இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கும் ஆனால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் முதல் ஆறு மாதகாலங்களில் (£36m) தாம் பாவித்த எரிபொருட்களின் செலவிலும் பார்க்க இறுதி மூன்று மாகாலத்துக்கும் (£72m) கூடுதலான எரிபொருட்களை தாம் பாவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஸ் ஏயார்வேஸ் நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் இருந்து ஒருநாளைக்கு இரண்டு முறை சிட்டி விமான நிலையத்தில் இருந்து நியுயோர்க் விமான நிலையத்துக்கான 32 ஆசனங்களை கொண்ட சொகுசு விமான சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது. |
|
Last Updated ( Friday, 01 February 2008 )
|
|
|
இன்று அமெரிக்காவினுடைய வட்டிவீதம் குறைவடையும்? |
|
Wednesday, 30 January 2008 |
|
அமெரிக்காவினுடைய மத்திய வங்கியானது தன்னுடைய நாட்டு பொருளாதாரா நிலமையும் கருத்தில்கொண்டும், பங்குச்சந்தையிலே கடந்த சில வாரங்களிலே ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவும், அமெரிக்காவினுடைய வீட்டுச் சந்தை நிலவரங்களில் மேலும் வீழ்சசி ஏற்படும் என்ற பிதீயினாலும் இந்த மாதம் எவருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக தன்னுடைய வட்டி வீதத்தை 0.75% ஆக குறைத்தமை அனைவரும் அறிந்ததே.
இதே போன்ற ஒரு அதிரடிக் குறைப்பை இன்றும் அமெரிக்க மத்திய வங்கி செய்யும் என நாம் திட்டவட்டமாக எமது இணையத்தளவாசகர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.இன்று இங்கிலாந்து நேரம் 7.15pm மணிக்கு இந்த வட்டிவீதக்குறைப்பு இடம்பெறும். இந்த வட்டி வீதக்குறைப்பானது 0.25% ஆகவோ அன்றி 0.50% ஆகவோ இருக்கலாம். ஏன் 0.75% ஆக இருக்கும் எனக்கூட பொருளாதாரா வல்லூனர்கள் சிலர் கருத்துதெரிவித்துள்ளனர்.
பங்குச் சந்தையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையிலே ஏற்பட்ட விலை அதிகரிப்பானது அமெரிக்காவானது வட்டி வீகிதத்தை 0.50% ஆக குறைக்கும் என்ற அடிப்படையிலேயே ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இன்று எற்படும் இந்த வட்டிவீகித குறைப்பானது 0.50% இனால் ஏற்படும் எனின் பங்குச் சந்தையிலே எந்தவித பெரிய மாற்றத்தையும் எற்படுத்த போவதில்லை. இருப்பினும் வட்டிவீகிதமானது 0.25% ஆக மட்டுமே குறைக்கப்பட்டால் பங்குச்சந்தையிலே பங்குகளில் விலையிலே விழ்ச்சி ஏற்படுவதனை நீங்கள் அவதானிக்கலாம். இத்தகைய வட்டி வீகிதக்குறைபப்பானது அமெரிக்கவினுடைய பணமதிப்பை (டொலர் மதிப்பு) குறைப்பதுடன் தங்கத்தினுடைய விலையையும் அதிகரிக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. |
|
Last Updated ( Wednesday, 30 January 2008 )
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>
|
| Results 28 - 36 of 42 |