முதற் பக்கம் arrow முதற் பக்கம்
முதற் பக்கம்
உலகின் முதற் பத்து பணக்கார நாடுகள்
Tuesday, 08 April 2008
உலகின் முதற் பத்து பணக்கார நாடுகளின் வரிசையும் தனினபர் வருமானமும் கீழே. அமெரிக்கா தான் மிகப் பணக்கார நாடு என அதிகமானோர் நினைகிறார்கள் ஆனால் அது எழாம் இடத்தில் இருக்கிறது. அடுத்து இங்கிலாந்து முதற் பத்து வர்சையிலேயே இடம் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இடம்நாடு தனினபர் வருமானம்
1Luxembourg$ 68,800
2Equatorial Guinea$ 50,200
3United Arab Emirates$ 49,700
4Norway$ 47,800
5Ireland$ 43,600
6United States$ 43,500
7Andorra$ 38,800
8Iceland$ 38,100
9Denmark$ 37,000
10Austria$ 35,500
Source: CIA World Factbook


Last Updated ( Tuesday, 08 April 2008 )
உலகின் மிகப்பெறுமதியான நாணயம்
Saturday, 05 April 2008
Imageஉலகின் மிகப்பெறுமதியான நாணயம் குவைற் தினார் ஆகும். 2007 ஆண்டின்படி ஒரு குவைற் தினாரின்(Kuwaiti Dinar ) சராசரிப் பெறுமதி 3.61 அமெரிக்கன் டொலர்கள் ஆகும். இது ஏறத்தாழ 1.75 ஷ்ரேலிங் பவுண்டுகள் ஆகும்.

 
Last Updated ( Saturday, 05 April 2008 )
பிரிட்டிஷ் நிறுவனங்களை வாங்கியது டாட்டா நிறுவனம்.
Wednesday, 26 March 2008
இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனமாகிய டாட்டா மோட்டார் நிறுவனம் பிரிட்டனிலுள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனங்களை (புதன்கிழமை) இன்று வாங்கியுள்ளது.


அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான fபோர்ட் நிறுவனத்திடமிருந்து இரண்டு பில்லியன் பவுண்ட்டுகள் கொடுத்து இந்த இரு நிறுவனங்களும் வாங்கப்பட்டுள்ளது.


டாட்டா நிறுவனமானது உலக அளவிலே 80 நாடுகளில், 96 நிறுவனங்களை உள்ளடக்கி சுமார் 22 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனமாக டாட்டா குழுமம் திகழ்கிறது. உலகளவில் டாட்டா குழுமத்தில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பணியாளர்கள் பணி புரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உலக அளவில் ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவர் கார்கள் மிகவும் பெறுமதி வாய்தவை. உலகச் சந்தையில் ஜாக்குவார் கார் £75,000 பவுண்டுகளும், லாண்ட் ரோவர் £60,000 பவுண்டுகளுக்கும் விற்கப்படுகிறது.


கடந்த ஜனவரி மாதம் உலகின் மிகக் குறைந்த (£1200) விலையுடைய குடும்ப காராகிய  நேனோவை டாட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியமை தொடர்பான செய்தியை எமது இணையத்தளமூடாக அறிந்திருப்பீர்கள்.


அன்றைய காலத்தில் மேற்கை நோக்கிய தான சந்தையே பெரும்வளர்சி அடைந்தது இன்று தெற்கைநோக்கிய சந்தை திறக்கப்பட்டுள்ளது என்பதற்கு நல்லதொரு எடுத்து காட்டாக இந்த வியாபாரம் இருப்பதாக பொருளாதார வல்லூனர்கள் கூறுகிறார்கள்.

Last Updated ( Wednesday, 26 March 2008 )
தன்னம்பிக்கை முனை நோக்கி...
Thursday, 20 March 2008
இது உங்கள் மீதான உங்களின் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு தொடர்..

கடந்த வாரம் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபொழுது பஷ்சில் யாரோ படித்துவிட்டு விட்டுச் சென்றிருந்த வாராந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கைகளில் பட்டது. சும்மா புரட்டிப்பார்தபொழுது அதில் எழுதப்பட்டிருந்த சுயமுன்னேற்ற கட்டுரை ஒன்று மனதைத் தொட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இத்தொடர் உருவாயிற்று.

எங்களுக்குள் ஏகப்பட்ட கவலைகள்...என்னிடம் பணம் இல்லையே? நான் படிக்கவில்லையே ? நான் அழகாக இல்லையே? பட்டியல் நீளும்.

ஆனால் எங்களிடம் எது இருக்கின்றதோ இல்லையோ எப்பொழுதும் இருக்க வேண்டிய ஒன்று உள்ளது. இது இருந்தால் மற்றவை எல்லாம் எம்மைத் தேடி வரும். அதுதான் தன்னம்ப்பிக்கை.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் எதையும் இலகுவாக சாதிக்கிறார்கள்.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் வெற்றி கொள்கிறார்கள்.

எனில் தன்னம்ப்பிக்கை என்பது தனி ஒருவருக்கான பரம்பரைச் சொத்தா? அதுதான் இல்லை.


Last Updated ( Friday, 21 March 2008 )
Read more...
Mc கிற்கு மயங்கிக் கிடக்கும் உலகம்
Thursday, 20 March 2008
Image

உலகின் 6 கண்டங்களிலும் இருக்கின்ற 119 மேற்பட்ட நாடுகளிலும்  காணப்படுகின்ற Mc Donalds  உணவகத்தின் எண்ணிக்கை 31000 இலும் அதிகம் ஆகும்.


நாள் ஒன்றிற்கு 47 மில்லியன்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இற்கு விஜயம் செய்கிறார்கள்.


இங்கு வேலை செய்கின்ற பணியாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1.5 மில்லியன்களுக்கு மேல். அடேயப்பா ! நிலமை இப்படியே போனால் நிலவில் கட்டப்படும் முதல் உணவகம் Mc Donalds   ஆய் தான் இருக்கும்.

Last Updated ( Thursday, 20 March 2008 )
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Results 19 - 27 of 42

advertisement

advertisement

advertisement

letzm.jpg