| ஏன் இந்த Marketing? |
| Wednesday, 16 September 2009 | |
ஒரு அமெரிக்கக் காலணி நிறுவனம், தங்கள் நிதி அலுவலரை (Financial Officer) பசிபிக் கடலில் பழங்குடியினர் வாழும் ஒரு தீவில், தங்கள் தயாரிப்புகளை விற்க சாத்தியமுண்டா என்று ஆராய்ந்து வர அனுப்பி வைத்தது. அவர் சில தினங்கள் கழித்துப் பின்வருமாறு தகவல் அனுப்பினார்: "இந்தத் தீவில் யாருமே காலணி அணிவதில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் சந்தை இங்கு கிடையாது." இத்தகவலை உறுதி செய்து கொள்ள தங்கள் விற்பனை அலுவலரை (Sales Officer) அதே தீவுக்கு அனுப்பி வைத்தது அந்தக் காலணி நிறுவனம். போய்ச் சேர்ந்து ஒரு வாரம் கழித்து அவர் அனுப்பிய தகவல்: "இந்தத் தீவில் தற்போது யாருமே காலணி அணிவதில்லை. நமது தயாரிப்புகளை அமோகமாக விற்க அருமையான வாய்ப்பு இருக்கிறது. உடனடி நடவடிக்கை தேவை." இரு வித தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் நிலைமைகளைச் சரியாக அறிந்து வர மார்க்கெட்டிங் அலுவலரை (Marketing Officer) அனுப்பி வைத்தது நிறுவனம். இரண்டு வாரங்கள் தீவில் கழித்துவிட்டு அவர் அளித்த அறிக்கையின் சாராம்சம்: "இங்கு மக்கள் யாரும் காலணி அணிவதில்லை. ஆயினும் இவர்களது கால்கள் மோசமான நிலையில் இருப்பது கண்கூடு. காலணிகள் மூலம் இவர்களுக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும். ஆனால், இந்தத் தீவில் வாழ்வோரின் கால்கள், இயல்பை விடச் சிறியதாக இருப்பதால், முதலில் நாம் நமது தயாரிப்புகளைச் சற்று மாற்றியமைக்க நேரும். மேலும் காலணி அணிவதின் பயன்கள் குறித்து இவர்களிடம் விளக்க சரியான திட்டங்களும் தேவை. இந்தப் பழங்குடியினரின் தலைவரது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம். மேலும் இவர்களுக்குப் பணம் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் தங்கள் தீவில் விளைகின்ற அன்னாசிப் பழங்களைக் காலணிகளுக்குப் பதிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள இவர்கள் முன் வரக் கூடும். நல்ல தரமான பழங்கள். மூன்று வருடங்களுக்கு இங்கு நமக்கு இருக்கும் விற்பனை வாய்ப்பு, விற்பனைக்காக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளுக்கான செலவுகள், அன்னாசிப் பழங்களை நமக்குப் பழக்கமான முன்னணி சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திடம் விற்பதற்கான திட்டம் ஆகியவற்றுக்கான மதிப்பீட்டை இத்துடன் இணைத்துள்ளேன். அதன் அடிப்படையில் நமக்கு 30% லாபம் கிட்டும் என்று நான் அனுமானிக்கிறேன். இது நமது நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட லாப சதவீதம் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பது எனது சிபாரிசு." இங்கு நிதி அலுவலர், விற்பனை அலுவலரிடமிருந்து மாறுபட்டு, சந்தையிடல் அலுவலரின் அறிக்கையை முழுமைப்படுத்திய அம்சங்கள் எவை? 1. தீவு மக்களின் சரியான தேவையை இனங்கண்டு கொண்டது. 2. தேவையைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பயன் தரக் கூடிய சரியான பொருளை முடிவு செய்தது. 3. விற்பனைக்குத் துணை செய்யும் ஏனைய நடவடிக்கைகளித் திட்டமிட்டது. 4.வரவு - செலவு, மற்றும் உத்தேச லாப மதிப்பீட்டுக்கணக்கை உருவாக்கியது இப்படியாக, ஒரு தரமான சந்தையிடல் சிந்தனையானது, தேவையில் துவங்கி, விற்பனைக்கான வாய்ப்பினைக் கண்டு கொண்டு, பயன் அளிக்கும் பொருளை முடிவு செய்து, லாபம் என்னும் நோக்கத்தை அடையும் பயணமாக இருக்க வேண்டும். |
|
| Last Updated ( Wednesday, 16 September 2009 ) |



முதற் பக்கம்
ஒரு அமெரிக்கக் காலணி நிறுவனம், தங்கள் நிதி அலுவலரை (Financial Officer) பசிபிக் கடலில் பழங்குடியினர் வாழும் ஒரு தீவில், தங்கள் தயாரிப்புகளை விற்க சாத்தியமுண்டா என்று ஆராய்ந்து வர அனுப்பி வைத்தது. அவர் சில தினங்கள் கழித்துப் பின்வருமாறு தகவல் அனுப்பினார்: 


