| OIL விலைகளின் எதிர்காலம் என்ன? |
| Sunday, 21 September 2008 | |
|
பெற்ரோலியப் பொருட்களின் விலையானது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது போல் அண்மைக்காலங்களிலே மிகப்பெரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டின்தொடக்கமாகிய ஐனவரி மாதங்களிலே $59 ஆக இருந்த விலையானது கடந்த யூலை (july 2008) மாதங்களிலே $148 ஆக அதிகரித்திருந்தது பின்னர் கடந்த வாரம் (16-09-2008) இப்பொருட்களின் விலையானது $90 ஆக குறைவடைந்துள்ளது. இது இப்படியிருக்கையிலே இப்பொருட்களின் விலையானது எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு கடந்த வார விலையான $90 என்பது தான் மிகக்குறைவாக இருக்க கூடிய விலையென்றும் இனி எதிர்வரும் காலங்களிலே இதனுடைய விலைகள் அதிகரிக்க கூடிய வாய்புகள் இருப்பதாக பொருளாதார அவதானிகள் கருத்துக் கூறுகிறார்கள். அப்படியாயின் எதிர்கால விலை மாற்றங்களை முன்கூட்டியே அறியலாமா? உலகின் மிகப்பெரிய Hedge Funds கம்பனிகள் வரைபடங்களை பாவிப்பதன் மூலம் எதிர்காலங்களிலே விலைகளில் எற்படுகின்ற அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சிகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றார்கள். (வரைபடத்தை பார்க்க இங்கே அழுத்தவும்) அந்த வகையிலே பெற்றோலியப்பொருட்களின் விலைகளில் ஏற்பட கூடிய மாற்றங்களை மேலே உள்ள வரைபடத்ததை பார்பதன் மூலம் உங்களால் இலகுவாக விளங்கி கொள்ள கூடியதாக இருக்கும். அதாவது இங்குள்ள வரைபடத்தின் படி Oil இன் விலை $108 க்கு மேலே போனால் அதனுடைய விலையானது இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றார்கள். அதாவது இந்த வரைபடத்தை பார்க்கும் போது அதில் $148 விலையில் இருந்து கீழ் நோக்கி நேராக ஒரு (சிகப்பு, நீல நிறக்கோடு) கோடு வரையப்பட்டுள்ளது. அந்த சிகப்பு நிறக்கோட்டின் தொடக்க புள்ளியாகிய $108 க்கு சென்றால் Oil விலையானது முதலில் சிகப்பு நிறக்கோட்டின் முடிவுப்புள்ளியாகிய $122 விலையை அடையும் என்றும் கருதுகிறார்கள்.அப்படி ஒருஅதிகரிப்பு இடம்பெற்றால் இதைத்தொடர்ந்து அந்த விலையிலும் பார்க்க கூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்று பொருளாதாரா வல்லூனர்கள் கருதுகிறார்கள். வரைபடங்களின் உதவியுடன் பெற்றோலியப்பொருட்களின் விலைகளை மட்டுமன்றி பங்குச் சந்தையிலுள்ள பங்குகளின் விலை, நாடுகளுக்கு நாடுகளுக்கிடையிலான அன்னிய செலவாணி மற்றும் தங்கங்களின் விலைகளையும் ஒரளவுக்கு முன் கூட்டியே அறியக்கூடியதாக இருக்கும். கடந்த வாரம் தங்கத்தினுடைய விலையானது $736 இலும் பார்க்க குறைவடையாது என்று கூறியிருந்தோம் பின்னர் இரண்டே நாட்களின் இதுவரைகாலமும் நிகழாத படி தங்கத்தின் விலையானது $100 அதிகரித்தது. அதுபோல் வரைபடத்தின் உதவியுடன் Euro/Dollar விலை 1.3850 க்கு கீழே போகாமல் மேலே செல்லும் என்று கூறியிருந்தோம். இன்று அதனுடைய விலையானது 1.4400 ஆகவுள்ளது. வரைபடத்தின் உதவியுடன் எவ்வாறு விலைகளை முன்கூட்டியே அறிவது என்பதனை அறிய ஆவலாக இருப்பின் எமது மின்னஞ்சலுக்கு ( ) தொடர்பு கொள்ளவும். |
|
| Last Updated ( Monday, 22 September 2008 ) |
| Next > |
|---|





