முதற் பக்கம் arrow தன்னம்பிக்கை முனை
தன்னம்பிக்கை முனை நோக்கி...
Thursday, 20 March 2008
இது உங்கள் மீதான உங்களின் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு தொடர்..

கடந்த வாரம் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபொழுது பஷ்சில் யாரோ படித்துவிட்டு விட்டுச் சென்றிருந்த வாராந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கைகளில் பட்டது. சும்மா புரட்டிப்பார்தபொழுது அதில் எழுதப்பட்டிருந்த சுயமுன்னேற்ற கட்டுரை ஒன்று மனதைத் தொட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இத்தொடர் உருவாயிற்று.

எங்களுக்குள் ஏகப்பட்ட கவலைகள்...என்னிடம் பணம் இல்லையே? நான் படிக்கவில்லையே ? நான் அழகாக இல்லையே? பட்டியல் நீளும்.

ஆனால் எங்களிடம் எது இருக்கின்றதோ இல்லையோ எப்பொழுதும் இருக்க வேண்டிய ஒன்று உள்ளது. இது இருந்தால் மற்றவை எல்லாம் எம்மைத் தேடி வரும். அதுதான் தன்னம்ப்பிக்கை.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் எதையும் இலகுவாக சாதிக்கிறார்கள்.

தன்னம்ப்பிக்கை உடையவர்கள் வெற்றி கொள்கிறார்கள்.

எனில் தன்னம்ப்பிக்கை என்பது தனி ஒருவருக்கான பரம்பரைச் சொத்தா? அதுதான் இல்லை.


தன்னம்ப்பிக்கை என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கின்ற ஒரு தங்கப்புதையல்.

அதை நீங்களே கண்டு கொள்ளாவிட்டால் யார் தான் கண்டு கொள்வார்கள்
கண்டு கொள்ளுங்கள்! யாவரும் உங்களைக் கண்டுகொள்வார்கள் !!
வெற்றி உங்களைக் கண்டுகொள்ளும் !!!

தன்னம்ப்பிக்கை என்பது உங்களின் மீதான உங்களின் நம்பிக்கை
உங்களை நீங்களே நம்பாவிட்டால் யார் தான் உங்களை நம்புவார்கள்?

உங்களை நீங்கள் நம்புங்கள் ! உலகம் உங்களை நம்பும் !!
வெற்றி உங்கள் வாசல் தேடி வரும் !!!

இச் சுயமுன்னேற்றத்தொடர் உங்களைத் தன்னம்பிக்கை முனைக்கு அழைத்துச் செல்லும்..
உங்களின் மீதான உங்களின் நம்பிக்கையை எடுத்துச் சொல்லும்.

தன்னம்பிகையை வளர்ப்பதற்கு பல வழிகள் அறிவியல் ரீதியாகவும் , மனோததுவரீதியாகவும் , ஆன்மீகரீத்யாகவும் கண்டறியப்படிருகின்றன. ஆனாலும் இலகுவான பத்து வழிகள் இங்கே பக்குவமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என நாம் அலட்டிக்கொள்வதுண்டு. ஆனால் எங்களை எங்களுக்குத் தெரியுமா? நாம் ஒருபோதும் சிந்தித்ததில்லை.

இதோ பத்து வழிகளில் முதலவது வழி "உன்னை அறிதல்"

வாருங்கள் லொட்டரி வாங்குவதை விட்டு விட்டு தன்னம்பிக்கை முனை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்குவோம்.

(தன்னம்பிக்கை முனை நோக்கிய பயணம் தொடரும்)

உங்கள் விமர்சனங்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றது

Last Updated ( Friday, 21 March 2008 )

advertisement

advertisement

advertisement

advertisement

letzm.jpg