|
Tuesday, 08 January 2008 |
 பிரித்தானியாவில் யாரை பார்த்தாலும் எந்தநேரமும் வீட்டு விலை குறைய போகின்றது என பொருளாதார வல்லுனர்கள்போல் கதைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் எம்மவர்கள் விதிவிலக்கானவர்கள் அன்று, இவர்களும் தமக்கு தெரிந்த வகையில் பொருளாதாரத்தை அலசிஆராய்கிறார்கள். இவர்களது கதையை கேட்டு கஸ்டபட்டு உழைத்த காசிலை வாங்கின வீட்டுக்கு என்ன நடக்குமோ என்று எம்மவர்கள் பலர் யோசிக்க தொடங்கிவிட்டார்கள். அதிலும் ஒரு சிலர் நல்லா குறைஞ்சா ஒரு இரண்டு முன்டை வாங்கிபோடலாம் என நினைப்பவர்களும் எம்மில் உண்டு. குறிப்பாக இந்த வீட்டு சந்தையை நோக்கினால் வீட்டு விலைகளின் ஏற்றத்தாழ்வானது ஒரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளிலே கூடிக்குறைகின்றன. ஆதாவது கடந்த 200 ஆண்டுகளுக்கான வீட்டு விலைகளின் புள்ளிவிபரங்களை உற்றுநோக்கினால் மிக முக்கியமான ஒரு விடயத்தை எம்மால் அவதானிக்க முடியும்.
அது என்னவெனில் இந்த 200 வருட புள்ளிவிபரங்களிலே வீட்டுக்கான விலைகளின் ஏற்றதாழ்வுகள் ஒவ்வொரு 18 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்ந்தவண்ணமுள்ளது. அந்த வகையிலே பிரித்தானியாவில் கடைசியாக இடம் பெற்ற வீட்டு விலைகுறைப்பானது 1990 ஆம் ஆண்டளவிலே இடம்பெற்றது அனைவருக்கு தெரிந்ததே இந்த ஆண்டிலே எம்மவர்கள் பலர் வீட்டுக்கான மாதாந்த தவணையை கட்ட முடியாமல் வீட்டு சாவியை வங்கியிடம் கொடுத்து விட்டு சென்ற நிகழ்வுகள் பல.
எனவே கடந்த கால புள்ளிவிபர அடிப்படையில் பார்கின்றபோது இந்த 18 வருட இடைவெளி என்பது இந்த வருடமாக(2008) இருப்பதால் வீட்டு விலைகள் குறைய கூடிய சாத்தியகூறுகள் இருக்கின்றது. எனவே முதலீடு என்ற அடிப்படையில் வீடுகளை வாங்க இருக்கும் முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையாக செயற்பட்டால் நன்று.
முக்கிய குறிப்பு:
இந்த தகவல் எம்முடைய தனிப்பட்ட கருத்து இதனைக் குறிப்பாக கொண்டு செயற்பட்டு இதனால் ஏற்படும் இலாப நட்டத்துக்கு நாம் பொறுப்பல்ல |
|
Last Updated ( Tuesday, 08 January 2008 )
|
|
|
Tuesday, 01 January 2008 |
எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்று நம்மவர்கள் சும்மாவா சொன்னார்கள். எவ்வளவு காலத்திற்கு தான் யாருடைய வீட்டிலே வாடகைக்கு இருப்பது எனவே தான் இலண்டனிலே எம்மவர்களும் தமது பெருமுயற்சியால் தங்களுக்கு என சொந்தமாக வீடுகளை வாங்குகிறார்கள். ஆனால் வீடுவாங்கும் போது எப்படிப்பட்ட நிறுவனங்களிடம், எவ்வளவு கடன்களை பெறுவது போன்ற விடயங்களை விபரம் அறிந்த சரியான ஆலோசகர்களிடம் இருந்து விபரங்களை பெறுவது இன்றியமையாதது.
வீட்டுக்கடன் கொடுப்பதற்காகவே பல வங்கிகள் உள்ளன. வருமானத்ததை அடிப்படையாக கொள்ளாமல் வீட்டுக்கடன் கொடுப்பதற்கு பல வங்கிகள் இருந்தாலும். கூடுதலான வங்கிகள் கூடிய வருமானத்தையும் கூடுதலான தொகையை வைப்பாக செலுத்துபவர்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு கடனைக் கொடுக்க நேசன்வைற் பில்டிங் சோசைற்றி, ஹலிஃபக்ஸ் பில்சி, ஸ்கொட்லானட் வங்கி போன்ற வங்கிகள் முன்வருகின்றன.
|
|
Last Updated ( Friday, 04 January 2008 )
|
|
Read more...
|
|
|