|
Thursday, 17 January 2008 |
|
உங்களுக்கு எற்படக்கூடிய சில (பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைய) நடைமுறைச் சந்தேகங்களை கேள்வி பதில் வடிவத்திலே இங்கு தருகிறோம்.
JURY SERVICE –ALLOWANCE
? நான் சுயமாக தொழில் செய்து கொண்டிருக்கின்றேன் என்னை அண்மையில்இரண்டு கிழமைக்கு “ஜீரி சேர்விஸ்” செய்யும் படி கடிதம் மூலம் அழைத்திருந்தார்கள். இந்த ஜீரிக்கு நான் சென்றால் என்னுடைய தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும். இந்த இழப்பை நான் எவ்வாறு சரிசெய்யலாம்?
* ஜீரி சேர்விஸ் என்பது கட்டாயம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாகும். வேலை செய்பவர்களாகள், சுயதொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஜீரி சேர்விஸ்க்கு செல்லும்பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை மீளப்பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை நீதிமன்றம் உங்களுக்கு தெரியப்படுத்தும். அத்துடன் உங்களுக்கு ஏற்படுகின்ற பிரயாணச் செலவுகள் மற்றும் இதரசெலவுகளை அதற்குரிய அத்தாட்ச்சியுடன் சமர்ப்பித்தால் அத்தொகையையும் மீளப்பெற முடியும். இங்கு நீங்கள் சுயதொழில் செய்பவராக இருப்பதனால் உங்களது கணக்காய்வாளரிடம் இருந்து உங்களுக்கு இந்த இரண்டு கிழமையிலும் ஏற்பட்ட இழப்பு தொடர்பான ஒரு கண்காய்வறிக்கையை (கடிதம்) சமர்பித்தால் உங்களால் அந்த இழப்புக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். |
|
Last Updated ( Thursday, 17 January 2008 )
|
|
Read more...
|
|
|
குழந்தைகளுக்கான வரிக்கொடுப்பனவு |
|
Tuesday, 01 January 2008 |
இங்கிலாந்து அரசாங்கத்தால் 2003 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு கொடுப்பனவு தான் இந்த குழந்தைகளுக்கான வரிக்கொடுப்பனவாகும் (சைல்ட் ரக்ஸ் கிறடிட்). இந்த கொடுப்பனவானது முன்னரும் கொடுக்கப்பட்ட போதிலும் இப்புதிய முறையால் யார் பிள்ளைகளைப் பராமரிக்கிறார்கள் என்பதற்கேற்ப அவர்களுடைய வங்கிக்கு கிழமைக்கோ அல்லது 4 கிழமைக் ஒருதடவையோ அவர்கள் விரும்பும் விதத்தில் வழங்கப்படுகிறது. இது முன்னைய வருடங்களி;ல் வழங்கப்பட்ட குழந்தைகளுக்கான கொடுப்பனவில் (சைல்ட் பேனிப்ஃட) இருந்து வேறுபடுகிறது. ஆதனால் தான் இந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை பெறுபவர்களும் இந்த வரிகொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம்.
பிள்ளைகளுக்கான இந்த வரிக்கொடுப்பனவை யாரால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை பார்போமாயின். குழந்தைப் பிள்ளைகள் இருக்கின்ற யாரென்றாலும் அவர்களுடைய ஆண்டுவருமானமானது 58,175 ஸ்ரேலிங் பவுண்களுக்கு குறைவாக இருப்பின் இக்கொடுப்பனவு வழங்கப்படும். இதுவே ஒருவயதுக்கு குறைவான பிள்ளையாக இருப்பின் ஆண்டுவருமானமானது 66,350 ஸ்ரேலிங் பவுண்களுக்கு குறைவாக இருந்தால் இந்த குழந்தை வரிக்கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம்.
|
|
Last Updated ( Friday, 04 January 2008 )
|
|
Read more...
|
|
|