முதற் பக்கம் arrow பங்குச் சந்தை
பங்குச் சந்தை
OIL விலைகளின் எதிர்காலம் என்ன?
Sunday, 21 September 2008
பெற்ரோலியப் பொருட்களின் விலையானது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது போல் அண்மைக்காலங்களிலே மிகப்பெரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டின்தொடக்கமாகிய ஐனவரி மாதங்களிலே $59 ஆக இருந்த விலையானது கடந்த யூலை (july 2008) மாதங்களிலே $148 ஆக அதிகரித்திருந்தது பின்னர் கடந்த வாரம் (16-09-2008) இப்பொருட்களின் விலையானது $90 ஆக குறைவடைந்துள்ளது.

Last Updated ( Monday, 22 September 2008 )
Read more...
பங்குச் சந்தையின் தற்போது உள்ள நிலவரம்
Sunday, 16 March 2008
Imageஉலகின் மிகமுக்கிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் பங்குச் சந்தையானது கடந்த ஓக்டோபர் மாதம் முதல் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை வரைபடங்களை கொண்டு அடுத்த சில கிழமைகளிலே பங்குச்சந்தையின் விலையிலே எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதனை பார்போம்.

Last Updated ( Sunday, 16 March 2008 )
Read more...
இன்று அமெரிக்காவினுடைய வட்டிவீதம் குறைவடையும்?
Wednesday, 30 January 2008
அமெரிக்காவினுடைய மத்திய வங்கியானது தன்னுடைய நாட்டு பொருளாதாரா நிலமையும் கருத்தில்கொண்டும்,  பங்குச்சந்தையிலே  கடந்த சில வாரங்களிலே ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவும், அமெரிக்காவினுடைய வீட்டுச் சந்தை நிலவரங்களில் மேலும் வீழ்சசி ஏற்படும் என்ற பிதீயினாலும் இந்த மாதம் எவருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக தன்னுடைய வட்டி வீதத்தை 0.75% ஆக குறைத்தமை அனைவரும் அறிந்ததே.
இதே போன்ற ஒரு அதிரடிக் குறைப்பை இன்றும் அமெரிக்க மத்திய வங்கி செய்யும் என நாம் திட்டவட்டமாக எமது இணையத்தளவாசகர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.இன்று இங்கிலாந்து நேரம் 7.15pm மணிக்கு இந்த வட்டிவீதக்குறைப்பு இடம்பெறும். இந்த வட்டி வீதக்குறைப்பானது 0.25% ஆகவோ அன்றி 0.50%  ஆகவோ இருக்கலாம். ஏன் 0.75% ஆக இருக்கும் எனக்கூட பொருளாதாரா வல்லூனர்கள் சிலர் கருத்துதெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்

கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையிலே ஏற்பட்ட விலை அதிகரிப்பானது அமெரிக்காவானது வட்டி வீகிதத்தை 0.50% ஆக குறைக்கும் என்ற அடிப்படையிலேயே ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இன்று எற்படும் இந்த வட்டிவீகித குறைப்பானது 0.50% இனால் ஏற்படும் எனின் பங்குச் சந்தையிலே எந்தவித பெரிய மாற்றத்தையும் எற்படுத்த போவதில்லை. இருப்பினும் வட்டிவீகிதமானது 0.25% ஆக மட்டுமே  குறைக்கப்பட்டால் பங்குச்சந்தையிலே பங்குகளில் விலையிலே விழ்ச்சி ஏற்படுவதனை நீங்கள் அவதானிக்கலாம். இத்தகைய வட்டி வீகிதக்குறைபப்பானது அமெரிக்கவினுடைய பணமதிப்பை (டொலர் மதிப்பு) குறைப்பதுடன் தங்கத்தினுடைய விலையையும் அதிகரிக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Last Updated ( Wednesday, 30 January 2008 )
பத்தே நாட்களில் £10000 உழைக்கலாம்?
Monday, 14 January 2008
Imageசாவால்கள் நிறைந்ததுதான் மானிடவாழ்கை, அந்த சாவல்களை எவ்வாறு மனிதன் எதிர்கொண்டு வெற்றியடைகிறானோ அவன்தான் வாழ்கையின் உயரத்துக்கு செல்வான் என்பது யதார்தம். இங்கும் அப்படி தான் தொழில் என்று வந்திட்டால் சாவால்களை எதிர்கொள்ளவேண்டும்

சவால்கள் என்கின்ற போது பங்குச் சந்தை (Share Market), பணச்சந்தை (Currency Market), பொருள்சந்தை (Commodity Market) போன்ற முதலீட்டுச் சந்தைகள் சாவால்கள் நிறைந்தவையே இருப்பினும் இத்தகைய சவால்களை ஏற்க தயாராக இருப்பவர்கள் இச்சந்தைகளிலே முதலீடு செய்யும் போது பெரும்தொகையான பணத்தை இலாபமாக (நட்டமும் ஏற்படும்) ஈட்டுகிறார்கள்.

Last Updated ( Monday, 14 January 2008 )
Read more...
பங்கு சந்தை முறை
Tuesday, 01 January 2008
Imageபுலம் பெயர்ந்த எம்முறவுகள் பொருளாதார ரீதியிலே கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளமை இன்று வரவேற்கதக்க வி;டயமாக இருந்த போதிலும் எம்மவர்களில் சிலர் எந்த வித ஆலோசனைகளும் இன்றி பெருமளவான பணங்களை முதலீடுகளாவும், வாடகையாகவும், வரியாகவும் பெருமளவான பணத்தை கொடுத்தும் தாம் எதிர்பார்த இலக்கை அடையமுடியாமல் தமது முதலீடுகளை இழப்பவர்கள் அதிகமாகவும் இருக்கின்றமை இங்கு வருந்தத்தக்க விடயமாகும்.


அன்மையில் ஒரு நிகழ்விலே என்னுடைய பாலிய நண்பன் ஒருவரை சந்திக்க நேர்ந்தது மிகவும் மகிழ்வாக இருந்தது. இருப்பினும் அவருடன் உரையாடும் போது அவர் வியாபாரத்துக்காக தன்னுடைய வீட்டை றீமோட்கேச் செய்து மூதலீடாக இட்ட பணத்தை இழந்து மிகவும் ஒரு கஸ்டமான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இவருடன் உரையாடும் போது ஒன்றை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது என்னவெனில் இவர் எதுவித திட்டமிடலும் இன்றி யாருடைய ஆலோசனையும் இன்றி பெரிய ஒரு தொகையை நன்மதிப்பாக (மூதலீடாக) கொடுத்து வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார் ஆனால் இவர் எதிர்பார்த்த பலனை அடையமுடியவில்லை இதனால் இன்று கடன் சுமை.


 
Last Updated ( Wednesday, 30 January 2008 )
Read more...

advertisement

advertisement

advertisement