முதற் பக்கம் arrow செய்திகள்
செய்திகள்
Windows சின் வில்லன்
Monday, 14 September 2009
Imageகடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.

கூட மாறாலாம்..
Last Updated ( Monday, 14 September 2009 )
Read more...
12 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் Google
Monday, 14 September 2009
Imageசெப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

.
Last Updated ( Monday, 14 September 2009 )
Read more...
ஒலீம்பிக்ஸ் 2008 திருவிழா
Monday, 25 August 2008
ஒலீம்பிக்ஸ் 2008 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் நேற்று சினாவின் தலைநகர் பீஜீங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கான விளையாட்டுவீரர்கள் மற்றும் தொலைக்காட்சியுடாக பல பில்லியன் மக்கள் கண்டுகளிக்க ஒலீம்பிக்ஸ் 2008 நிறைவடைந்துள்ளது. இதுபற்றிய செய்திகளையும் ஒளிப்படங்கள் மற்றும் கானொளியையும் நீங்கள் பார்திருப்பீர்கள்.

இந்த ஒலீம்பிக்ஸ் திருவிழாவுக்கு சீனா அரசாங்கம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமாக??
2001 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்குக்கான ஏற்பாடுகளை சீனா அரசாங்கம் கவனிக்க  தொடங்கிவிட்டது இதற்காக ஒதுக்கிய தொகை கிட்டத்தட்ட அந்த நாட்டு காசிலே 208 பில்லியன் யன் (இதுவே அமெரிக்க டொலர்களிலே 40.9 பில்லியன்)

இத்தொகைக்குள் பீஜீங்கை நகரத்தை அழகு படுத்தியது புதிய போக்குவரத்து வசதிகள். சங்கர் படத்ததுக்கு செற் போட்டது போல் அமைக்கப்பட்ட புதிய விளையாட்டு மைதானத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் அமாக்கூடிய மிகப்பிரமாண்டமான அரங்குகள்.

மேலும் இத்தொகையை விட மேலதிகமாக விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்காக சீனா ஒலீம்பிக்ஸ் சங்கத்துக்கென கிட்டத்தட்ட 2பில்லியன் அமெரிக்க டொலர்களும் விளையாட்டு உபகரணங்களுக்கென மேலதிகமாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவுசெய்யப்பட்டுள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா ஒரு கொம்யூனிஸ் நாடாக இருந்த போதிலும் நேற்றய இறுதி நாள் நிகழ்விலே காட்டிய பிரமாண்டம் உலக நாடுகள் அனைத்தையும் வாய்பிழக்க வைத்து விட்டது. இது இப்படியிருக்ககையிலே . அடுத்த ஒலீம்பிக்ஸ் 2012 ஐ நடத்த போகின்ற நாடு பிரித்தானிய ஆகும்.

கடந்த ஆண்டில் இருந்து தயாரிப்பு பணிகளிலே பிரித்தானிய ஈடுபடத்தொடங்கி விட்டது புதிய விளையாட்டுத்திடலுக்கான இடம் ஒதுக்கபட்டு பணிகள் இடம்பெற்றுக்கொணடிருக்கின்றன. நேற்ற இறுதி நிகழ்வுவிலே சம்பிரதாய பூர்வமாக ஒலீம்பிக்ஸ் கொடியை பெற்றுக்கொண்ட இலண்டன் மேயர் பிரித்தானிய தொலைக்காட்ச்சிக்கு வழங்கிய பிரத்தியே பேட்டியிலே 2012 ஆம் ஆண்டு ஒலீம்பிக்ஸ்சுக்கான செலவு 9.3 பில்லியன் ஸ்டேலிங்ஸ் பவுண்ஸ் ஆக இருக்கும் என கருத்து கூறியுள்ளார்

 இந்த தொகை நேற்று கூறியது அடுத்த ஒலீம்பிக்ஸ்க்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது இந்த நான்கு வருடங்களில் இத்தொகையானது அதிகரிக்கவே வாய்புகள் உள்ளது. இதற்கெல்லாம் பிரித்தானியாவின் தற்போதைய பொருளாதாரம் இடம்கொடுக்குமா என்பதனை பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்.

மிகப்பெரிய விலை அதிகரிப்பு.
Wednesday, 30 July 2008

இங்கிலாந்திலே எரிவாயு மற்றும் மின்சாரங்களை வழங்குகின்ற மிகப்பெரிய நிறுவனமாகிய "பிறீட்டிஸ் காஷ்" நிறுவனமானது தன்னுடைய விலையை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அதிகரித்துள்ளது. எரிவாயுவினது விலையானது 35 வீகிதமாகவும்,மின்சாரத்தின்விலையை 9வீகிதமாகவும் அதிகரிப்பு செய்துள்ளது.


இந்த விலை அதிகரிப்பினால் 15.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படபோகிறார்கள். குறிப்பாக நீங்கள் "பிறீட்டிஸ் காஷ்" நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை பெறுபவராக இருப்பின் உங்கள் வீட்டுக்கான எரிவாயுவுக்கான செலவீனம் 25 வீகிதத்தினால் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பினால் உங்களுடைய வீட்டுப்பாவனைக்குரிய ஆண்டுக்கான ஏரிவாயு செலவானது சராசரியாக £1240 ஆக இருக்கும்.


கடந்த கிழமை எரிவாயுவை வினியோகிக்கின்ற இன்னுமொரு நிறுவனமாகிய ஈடிஎப்ஃ நிறுவனமும் தங்களுடைய எரிவாயுவுக்கான விலையை 22 வீகிதமாகவும் மின்சாரத்தை 17 வீகிதமாகவும் அதிகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மேற்குறிப்பிட்ட விலை அதிகரிப்பானது இந்த ஆண்டு இரண்டு முறை இடம்பெற்றுள்ளமை இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும்.


அருகில் உள்ள படத்தை பாருங்கள் விலை அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுGraph showing price rises

 
தசாவாதாரத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடிகள்
Friday, 06 June 2008
கமல்ஹாஷன், அசின் நடிக்க கே எஷ் ரவிக்குமார் இயக்கும் "தசாவாதாரம்" திரைப் படத்தின் தயாரிப்புச் செலவுகள் 150 கோடியைத் தாண்டியுள்ளது.
 
அத்துடன் 1200 பிரதிகள் வெளியிடப்படுகின்றன. இதுவரை எந்தப்படதிற்கும் இத்தனை பரதிகள் வெளியிடப்பட்டதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Results 1 - 9 of 42

advertisement

advertisement

advertisement